2024 இல் விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலமான ஜோடிகள்.. இதோ லிஸ்ட்..!

By Nanthini on டிசம்பர் 31, 2024

Spread the love

சினிமாவை பொருத்தவரையில் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வதும் அதன்பிறகு விவாகரத்து செய்வதும் சகஜம் தான். ஒரு சில திரை பிரபலங்கள் மட்டுமே காதலித்து திருமணம் செய்து கொண்டு காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சில சினிமா பிரபலங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென விவாகரத்தை அறிவித்து விடுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு விவாகரத்தை அறிவித்த சினிமா பிரபலங்கள் மற்றும் மக்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சோயிப் மாலிக்கை விவாகரத்து செய்தாரா சானியா மிர்சா... - தந்தை குறிப்பிட்ட  'குலா' என்றால் என்ன? | Did Sania Mirza divorce Shoaib Malik? - hindutamil.in

   

சானியா மிர்சா:

   

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்து பல போட்டிகளில் சாதித்தவர் தான் சானியா மிர்சா. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த தம்பதியினர் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஜனவரி மாதம் தங்கள் விவாகரத்தை அறிவித்தனர்.

 

G.V.Prakash,ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குழந்தைக்கு சூட்டியுள்ள கியூட்டான  பெயர்! வைரலாகும் தகவல் - g v prakash and saindhavi reportedly named their  child anvi - Samayam Tamil

ஜிவி பிரகாஷ் – சைந்தவி:

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் பள்ளி மாணவியாக இருக்கும்போதே பாட வந்த சைந்தவியை காதலித்து வந்த நிலையில் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார். 11 ஆண்டு காலம் ஒன்றாக சேர்ந்து வாழ்க வந்த இவர்கள் இந்த வருடம் மே மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

ஹர்திக் பாண்டியாவை விவாகரத்து செய்த நடிகை நடாஷா! அவர் இந்த தமிழ் படத்தில்  நடித்தவரா? - சினிஉலகம்

ஹர்திக் பாண்டியா:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார். இப்படியான நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த தம்பதியினர் தங்கள் பிரிவை அறிவித்தனர்.

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து.. அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு

ஜெயம்ரவி:

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும் உள்ளன. தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கள் விவாகரத்தை அறிவித்தனர்.

எல்லாமே எதிர்பாராத முடிவாக உள்ளன- ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்- AR Rahman says We  had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an  unseen end

ஏ ஆர் ரகுமான்:

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருக்கும் ஏ ஆர் ரகுமான், சாய்ராம் பானுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த நவம்பர் 19ஆம் தேதி தங்கள் விவாகரத்தை அறிவித்தனர்.

பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு | Actor  Dhanush-Aishwarya file petition in court for mutual divorce

தனுஷ் – ஐஸ்வர்யா:

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இப்படியான நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் தங்கள் பிரிவை அறிவித்திருந்த நிலையில் சட்டபூர்வமாக சமீபத்தில் தான் இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது.