அடிச்சான் பாருடா அப்பாயின்மென்ட் ஆர்டர்.. படத்தில் கமிட்டான பிக்பாஸ் பிரதீப்.. அட்வான்ஸ் பணத்தோடு அவரே வெளியிட்டு அப்டேட்..

By Ranjith Kumar on பிப்ரவரி 10, 2024

Spread the love

பிக் பாஸ் தமிழ் சீசன் சீசன் 3 கவி நண்பனாக பிக் பாஸுக்குள் வந்த பிரபலமான பிரதீப் கடந்த வருடம் கவின் நடிப்பு வெளியான டாடா படத்தில் பிரதீப் அவர்களுக்கு நண்பனாக நடித்து மக்களிடம் மிகப் பரிச்சயமானார் இவர் அதிகமாக மக்களுக்கு தெரிய காரணம் கவின் நண்பன் என்ற காரணம். இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வீட்டில் உள்ள பெண்கள் பலர் எதிராக புரட்சிக் கொடியை தூக்கிய நிலையில், கமல்ஹாசன் அதிரடியாக பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு கூட பிரதீப் ஆண்டனியை சேர்க்கவே இல்லை.

   

அருவி படத்தில் நடித்த பிரதீப் ஆண்டனி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான வாழ் படத்திலும் கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது, உதவி இயக்குநரான பிரதீப் ஆண்டனி படம் இயக்கப் போவதாக தெரிவித்து வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஏற்கனவே 3வது சீசனில் கவின் விளையாடிய போது அவரை உள்ளே வந்து பார்த்த நண்பரும் இந்த பிரதீப் ஆண்டனி தான்.கடந்த சீசனில் அசீமுக்கு எதிராக ஏகப்பட்ட முறை போட்டியாளர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்த நிலையிலும் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுக்கவே இல்லை. கடைசியாக அவருக்குத்தான் டைட்டிலே கொடுத்து வழியனுப்பினர்.

   

 

ஆனால், இந்த சீசனில் ரெட் கார்டை வைத்தே கேமை கொண்டு போக நினைத்தார்களோ என்னவோ பிரதீப் ஆண்டனி ஆரம்பத்தில் இருந்தே வெறித்தனமாக விளையாட வைத்து பின்னர் அவரை அதிரடியாக வெளியே அனுப்பி வேறலெவல் கேம் பிளானை இந்த சீசனில் நடத்தினர். பிக் பாஸ் தமிழில் முதல் முறையாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பெண்களுக்கு எதிரானவர் பிரதீப் ஆண்டனி என அவரை ஒரு உமனைசர் ரேஞ்சுக்கு முத்திரை குத்தி வெளியே அனுப்பினர்.மாயாவும் அவரது டீமும் சேர்ந்து செய்த செயல் தான் பிரதீப் வெளியேற காரணம் என நினைத்த ரசிகர்கள் இறுதியில் மாயாவை ஜெயிக்க விடாமல் பிரதீப்புக்கு ஆதரவு குரல் கொடுத்த அர்ச்சனாவை ஜெயிக்க வைத்து விட்டனர்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பதிப்பை கேவலப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில், வெளியே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகளின் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில், புதிதாக படம் ஏதும் இயக்காமல் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளேன் என்றும் அதன் அட்வான்ஸாக 9 லட்சம் கொடுத்துள்ளனர் என செக் ஒன்றை பதிவிட்டு அந்த படம் எப்போ வரும் என்றெல்லாம் தெரியாது. வந்தால் தியேட்டருக்கு சென்று பாருங்கள் என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி.