சினிமாவையே ஓரம்கட்டிவிட்டு புத்த துறவியாக மாறிய பிரபல நடிகை.. என்ன காரணம் தெரியுமா..?

By Ranjith Kumar

Updated on:

கலைத் துறையில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே கூட்டி தன் பின்னால் சேகரித்து வைத்திருந்தார் பிரபலமான நடிகையாக வலம் வந்த கொண்டிருந்த சம அவர் செய்த ஒரு செயல் அனைத்து ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாகி உள்ளது. அவர் ஆரம்ப காலகட்டத்தில்முதல் படமே பிளாக்பஸ்டர் என்றாலும், பர்கா மதனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர், தனது திறமைக்கான கேரக்டர் வரும் வரை காத்திருந்தார்

   

ஃபெமினி மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்ற நடிகை பர்கா மதன் தற்போது கலைத்துறையை விட்டுவிட்டு புத்த துறவியாக மாறியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலிவுட்டில், கடந்த 1996 ஆம் ஆண்டில், அக்ஷய் குமார், ரவீனா டாண்டன், ரேகா மற்றும் பலருடன் நடித்த ‘கிலாடியோன் கா கிலாடி’ மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பர்கா மதன். இந்த படத்தில் ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கவில்லை, ஆனாலும் அவர் நடித்த ஜேன் என்ற கேரகட்டரில் சித்தரிப்பு பலரையும் கவர்ந்தது. இந்த படம் 1996-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 5 வது திரைப்படம் என்ற சாதனைக்கு இந்த கதாபாத்திரமும் ஒரு முக்கிய காரணம்.

முதல் படமே மெகா ஹிட் ஆனது என்றாலும், பர்கா மதனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர், தனது திறமைக்கான கதையும், கதாபாத்திரமும் வரும் வரை காத்திருந்தார். அப்போது தான் புகழ் பெற்ற இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ‘பூட்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். பர்கா மதனின் பொறுமை இந்த பட வாய்ப்பு தந்தது. படமும் வெற்றியடைந்த நிலையில், அவரின் கதாபாத்திரம் பெரும் அளவில் பேசப்பட்டது.  இதன் காரணமாக பல புகழ்பெற்ற இயக்குனர்கள் பர்கா மதனை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முன்வந்தனர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த பர்கா மதன் 1994 இல் ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்றார் என்பது பலருக்குத் தெரியாத ஒரு உண்மை. இந்த சுஷ்மிதா சென் வெற்றியாளராகவும், ஐஸ்வர்யா ராய் முதல் ரன்னர்-அப் ஆகவும் இருந்தபோது, பர்கா மிஸ் இந்தியா டூரிஸம் என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார்.

மாடலிங் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, இந்தி சினிமாவில் களமிறங்கிய பர்கா மதன், 2012 ஆம் ஆண்டில், நடிப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்து ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவரது  நடிப்புத் திறமையால் பல திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றதாகக் கூறப்பட்ட போதிலும், அவர் தனது கவனத்தை வேறு பாதையில் திருப்பியதால் நடிப்பில் இருந்து விலகினார். இதனிடையே லாமா ஜோபா ரின்போச்சியின் வழிகாட்டுதலின் கீழ், பர்கா மதன் கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்ட்சனில் புத்த துறவியானார். தன் பெயரை “வென்” என்று மாற்றிக் கொண்ட அவர், கியால்டன் சாம்டன் தனது புதிய ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்.

பர்கா மதன் நடிப்பை விட்டுவிட்டு புத்த துறவியாக மாறுவதற்கான தனது முடிவை அவரது பெற்றோர் முழு மனதுடன் ஆதரித்ததாக தெரிவித்தார். தற்போது, அவர் திபெத்தின் செரா ஜெ மடாலயத்தில் வாழ்க்கையை மிகவும் அமைதியாக கொண்டு செல்கிறார், எப்போதாவது அங்கிருந்து படங்களையும் வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொள்கிறார். ஹிந்தித் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்து திபெத்தில் புத்த துறவியாக மாறியே வாழ்க்கை பயணத்தை அத்திசையில் கொண்டு சென்றதை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

author avatar
Ranjith Kumar