actor vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிக்பாஸ் பார்வதி… – அட இது வேற லெவல் சம்பவமா இருக்குதே?

By Elango on மாசி 2, 2026

Spread the love

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிவடைந்தது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த சீசனில் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் வெற்றி பெற்றார். இந்த சீசனை பொருத்த வரை பிக்பாஸ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு போட்டியாளர் விஜே பார்வதி தான். பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் செய்த அட்ராசிட்டிகளை யாராலும் மறக்க முடியாது.

குறிப்பாக கார் டாஸ்க் ஒன்றில் சக போட்டியாளர் சாண்ட்ராவை பார்வதி உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளிய விவகாரத்தில் அவரும் கம்ருதீனும் ரெட்கார்டு காட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதில் ஒரு தரப்பினர் பார்வதிக்கு ஆதரவாக கருத்துகளை கூறியதும் குறிப்பிடத்தக்கது. எனினும் பிக்பாஸ் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கம்ருதீன் பார்வதி இருவருமே பங்கேற்றனர்.

   

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முத்து என்கிற காட்டான் என்கிற வெப் சீரிஸில் இப்போது நடித்து வருகிறார். இந்த சீரிஸில் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் விஜே பார்வதியும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரிஸின் தயாரிப்பளரே விஜய் சேதுபதிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீரிஸில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்பும் நடிக்கிறார்.