நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் படையப்பா. இந்த படத்தின் கதை திரைக்கதையை ரஜினியே எழுதி அவரே சொந்தமாகவும் தயாரித்து இருந்தார். இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்திருந்தார். கடந்த ஆண்டில் இந்த படம் ரி ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் மீண்டும் பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா கூறியதாவது, படையப்பா பாகம் 2 படத்தின் முழு கதையை அப்பா ஏற்கனவே எழுதி முடித்துவிட்டார். அந்த கதை மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. ஆனால் அந்தப் படத்தை இயக்கும் இயக்குனர் யார்? எப்போது படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
