பிக் பாஸ் வீட்டுக்குள்ள அடக்க ஒடுக்கமா இருந்த மாயாவா இது..? இப்படி கவர்ச்சியில இறங்கிட்டாங்களே… 

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர.

   

இவர்களில் விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது வெளியேற்றம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றமடைய செய்தது.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்டாக அர்ச்சனா, மணி ,மாயா, தினேஷ், விஷ்ணு ஐந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் யார் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார்கள் என்ற  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடங்கியது.

ஆனால் ரசிகர்கள் பலரும் அர்ச்சனா தான் டைட்டிலை  வெல்வார் என்று திடமாக கூறி வந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே கமலஹாசனின் ஆதரவு மாயாவிற்கே இருந்து வந்தது. அவர் செய்த எந்த ஒரு செயலையும் அவர் தட்டி கேட்டதே கிடையாது. என்று ஒரு புறம் மாயா தான் டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுத்து கமலஹாசன் அர்ச்சனாவின் கையை தூக்கி வெற்றியாளர் என அறிவித்தார். இதை தொடர்ந்து மணி இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தார். உண்மையாக சொல்ல போனால் மாயா மட்டும் இல்லையென்றால் இந்த சீசனில் கன்டென்ட் கொடுக்க யாருமே இருந்திருக்க மாட்டார்கள்.

தனது  திறமையான விளையாட்டு , விளையாட்டு யுக்தியை பயன்படுத்தி இவர் பல போட்டியாளர்களை வீழ்த்தியுள்ளார். என்னதான் பலர் இவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தாலும் ஒருபுறம் இவரை ஆதரிக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டமும் இணையத்தில் இவருக்கு உள்ளது.

தற்பொழுது மாயா தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபகாலமாக ஹாட் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பிக் பாஸ் வீட்டுக்குள்ள அடக்க ஒடுக்கமா இருந்த மாயாவா இது..? ‘ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.