சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு இணையத்தில் வைரலானவர் ஜூலி. அதன்பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் ஜூலிக்கு நல்ல அறிமுகமும் வரவேற்பும் கிடைத்தாலும் கடும் விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்பின் ஜூலி சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜூலி அதில் பதிவிட்டு இருந்தாலும் வருங்கால கணவருடைய முகத்தை காட்டவில்லை. அவர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் ஜூலிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…