பிரபல நடிகருக்கு ஜோடியாகப்போகும் பிக்பாஸ் ஜனனி… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

By Soundarya on ஜனவரி 3, 2025

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவில் ஒன்று பிக் பாஸ்.  பிக் பாஸ் சீசன் 6ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருவர் தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி. ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு இலங்கை போட்டியாளர் கலந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அதைப்போல முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

   

இவரைத் தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜனனி கலந்து கொண்டார்.  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு  அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தற்பொழுது இவரை பின்தொடர்ந்து வந்த ஜனனியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

   

 

தற்போது இவருக்கும்  பட வாய்ப்புகள் குவிந்து  கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மிகவும் பொறுமையாக இவர் கதைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறாராம். சமீபத்தில் இவர்  விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்த நடிப்புக்கு னால பாராட்டுக்களும் கிடைத்தது. இதனையடுத்து தற்போது ஜனனி கோலிவுட்டில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார். டி ஜே அருணாச்சலத்திற்கு ஜோடியாக ‘உசுரே” என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு விழா தெரிவித்து வருகிறார்கள்.