நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையானார். கோலிவுட்டில் அதிகமான சில படங்களிலேயே தமிழை முறையாக கற்றுக்கொண்டு தன்னுடைய சொந்த குரலில் ஏன் டப்பிங் பேசி வந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என எண்பதுகளில் பல முன்னணி ஹீரோக்கள் போட்டி போட்டு நடித்தார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார். முறைமாமன் படத்தில் நடித்த போது சுந்தர்சியோடு காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று ஹிந்தி நடிகர் ராஜூவ் கபூர் குறித்து பேசி இருக்கிறார். அதில்,” ராஜூவ் கபூருக்கு இதய பிரச்சினை இருந்தது. அது மட்டும் இல்லாமல் மதுவுக்கு ரொம்பவே அடிமையாகி விட்டார். அந்த மது பழக்கம் அவருக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்தது. இதனால் அந்த பழக்கத்திலிருந்து அவரை வெளியே கொண்டு வர முயற்சித்தும் பலன் கொடுக்கவில்லை .அவர் ரொம்பவே தாழ்வான இடத்துக்கும் சென்றுவிட்டார் என்பது ஒரு உண்மை .

அவருக்கு முழங்காலில் பிரச்சினை இருந்தது. அதை சரி செய்வதற்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இறக்கும்போது மும்பையில் தான் நான் இருந்தேன். முதன்முறையாக போனி கபூர் தான் ராஜு கப்போரின் இறப்பு குறித்து எங்களுக்கு சொன்னார். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்புதான் அவரோடு பேசினேன் .

கொரோனா காலகட்டத்தில் அவருக்கு காய்ச்சல் வேறு வந்துவிட்டது .அவர் தன்னுடைய உடல் நிலையை ரொம்பவே அலட்சியமாக எடுத்துக் கொண்டார் .அவருடைய மரணம் இன்னும் எனக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது. அவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இன்னும் அவர் எங்களுடனே தான் இருக்கிறார் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
