இவர் தானா அந்த ‘லக்கி ச்சாம்’.. காதலர் தினத்தன்று தன் காதலனை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் ஜாக்குலின்..!

Spread the love

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த நிலையில் முதல் படமே லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக இவர் நடித்திருந்தார்.

சினிமாவில் சைடு ரோலில் நடித்து வந்த இவரை சீரியல் ஹீரோயினியாகி அழகு பார்த்தது விஜய் டிவி தான். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி என்ற சீரியலில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் முடிவடைந்த கையோடு இவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பைனல் வரை சென்ற இவர் பணப்பெட்டியை எடுக்க ஆசைப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் திரும்ப முடியாததால் கண்ணீருடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதே சமயம் பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக முறை நாமினேட்டான போட்டியாளர் என்ற சாதனையையும் ஜாக்குலின் படைத்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜாக்களின் காதலர் தினமான இன்று தன்னுடைய காதலர் யார் என்பதை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

யுவராஜ் செல்வநம்பி என்பவரை ஜாக்குலின் காதலித்து வரும் நிலையில் காதலர் தினத்திற்காக நீதானே என் பொன்வசந்தம் என்ற பாடலுடன் யுவராஜை ஜாக்குலின் டேக் செய்த இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் ஜாக்குலின் பகிர்ந்துள்ள நிலையில் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

4 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

4 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

4 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

4 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago