தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர்தான் நடிகர் அர்ஜூன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கிய நிலையில் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற உமாபதிக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கிடைத்துவிட்டது.
ஐஸ்வர்யா அர்ஜுனை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அவரை காதலிக்க ஆரம்பித்து கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் நடிகர் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் சமீபத்தில் தனது 33 வது பிறந்த நாளை கணவர் உமாபதி மற்றும் குடும்பத்தினருடன் பிரம்மாண்டமாக கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்ட நிலையில் ஏகப்பட்ட கேக்குகளை அவர் வெட்டி கொண்டாடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. விதவிதமான கேக்குகளை கட் செய்யும் வீடியோக்களை ஐஸ்வர்யா அர்ஜூன் வெளியிட்டுள்ளார்.
அதில் ஆரம்பத்தில் சுத்தியல் வைத்து உடைக்கும் வித்தியாசமான கேக் இடம்பெற்றுள்ளது. தனது செல்ல நாய்க்குட்டியும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க கேண்டில் லைட் டின்னர் என பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. கேக் வெட்டி முடித்த கையோடு தனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஐஸ்வர்யா கேக் ஊட்டி விடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் அப்பா அர்ஜூன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்து வரும் சீதாப்பயணம் படம் குறித்த அப்டேட்டையும் கேட்டு வருகிறார்கள்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…