Categories: சினிமா

தமிழ் சினிமாவிலேயே ஒரு ஹாலிவுட் படம் ‘இணைந்த கைகள்’.. ராஜமௌலியே அந்த சீனை இந்த படத்தில்தான் சுட்டாரா?..

Spread the love

தமிழ் சினிமாவில் 1980 களில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக மாறியவர் ராம்கி. சின்னப் பூவே மெல்லப் பேசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹேண்ட்சம் நடிகரான ராம்கி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.

அதன் பின்னர் வரிசையாக படங்களில் நடித்த அவருக்கு மருதுபாண்டி, செந்தூரப் பூவே, பறவைகள் பலவிதம், இணைந்த கைகள்,  வனஜா கிரிஜா உள்ளிட்ட படங்கள் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.  ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் மார்க்கெட்டில் நிலைக்க முடியவில்லை.

ராம்கி, அருண் பாண்டியன், ஆபாவாணன் என திரைப்படக் கல்லூரியில் இருந்து வந்த மாணவர்கள் எல்லாரும் தமிழ் சினிமாவில் ஒரு புது ரூட்டில் கலக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய ஒரு ஆக்‌ஷன் திரைப்படம்தான் ‘இணைந்த கைகள்’.

ஹாலிவுட் சினிமா ஸ்டைலில் எதிரி நாட்டு சிறையில் இருக்கும் ஒரு கைதியைக் காப்பாற்ற இரண்டு பேர் சென்று அவரை காப்பாற்றி அழைத்து வருவதும் அதன் பின்னர் வில்லன் கூட்டத்தால் என்ன ஆகின்றனர் என்பதும்தான் கதை. இதை  மிகச்சிறப்பாக ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தாகப் படைத்திருப்பார்கள்.

இந்த படத்தின் இண்டர்வெல் காட்சி அப்போது மிக பிரபலம். அந்தக் காட்சியை சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் ராஜமௌலியும் ஒரு முக்கியமானக் கட்டத்தில் பயன்படுத்தி இருப்பார். இந்த படம் குறித்து பல ஆண்டுகள் கழித்துப் பேசிய ராம்கி “அந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை மட்டும் 30 நாட்கள் படமாக்கினோம்” என்று கூறியுள்ளார்.

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நெருக்கடியான ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும்.

vinoth

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago