1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் அறிமுகம் ஆனவர் வைரமுத்து. அப்போது இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.
அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.
ஆனாலும் ரஹ்மானின் வருகைக்குப் பிறகு வைரமுத்து தனது செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கி இப்போது வரை முன்னணி பாடல் ஆசிரியராக இருக்கிறார். ஆனால் அவர் இத்தனை ஆண்டுகள் சேர்த்து வைத்த புகழை அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரே நாளில் வீழ்த்திவிட்டன. முதலில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டை வைத்தவர் பாடகி சின்மயிதான். அவர் தொடர்ந்து வைரமுத்துவின் அத்துமீறல்களைப் பட்டியலிட்டு அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லிவந்தார். இதனால் வைரமுத்து சினிமாவில் பாடல்கள் எழுதும் வாய்ப்புகளை இழந்துள்ளார்.
இதனால் தொடர்ந்து தன் படங்களில் வைரமுத்துவை மட்டுமேப் பயன்படுத்திக் கொண்டிருந்த மணிரத்னம் கூட அவரை ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டுவிட்டார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வைரமுத்து, மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகிய மூவரும் கலந்துகொண்டு உரையாடினார்கள். அப்போது அவர்கள் பாடல் உருவாக்கும் விதம் பற்றி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ரஹ்மான் “பாடல் கம்போஸிங்குக்காக நாங்கள் உட்கார்ந்தால் பெரும்பாலும் வைரமுத்து சார்தான் பேசிக்கொண்டே இருப்பார். நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம். உரையாடல் முடியும் போது பாடல் வந்திருக்கும்.” எனக் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…