பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி ஆனது அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி ஜனவரி 19ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சி முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு 40 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது . இதனையடுத்து சௌந்தர்யாவுக்கு இரண்டாம் இடமும் விஜே விஷாலுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. அது மட்டும் இன்றி அவர் 5 லட்சத்திற்கான பணப்பெட்டியையும் எடுத்திருந்தார்.
அந்த தொகையையும் வென்றிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பெரும்பாலும் அதன் மூலமாக தங்களுக்கு கிடைக்கும் புகழை பயன்படுத்தி சினிமாவில் அடுத்த லெவலுக்கு செல்வார்கள். அந்த வகையில் கவின், ஹரிஷ் கல்யாண் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து தற்போது பிரபலமாக உள்ளார்கள். அந்த வரிசை விஜே விஷாலும் ஹீரோவாகும் முனைப்போடு தான் உள்ளே சென்றார்.
இதனை அடுத்து அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அவருக்கு ஹீரோவாகும் சான்ஸ் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஆல்பம் பாடல் ஒன்ரில் விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்த ஆல்பம் பாடலை சனோஜ் இயக்கியுள்ளார். இந்த ஆல்பம் பாடலில் விஷால் ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். இந்த ஆல்பம் பாடலுக்கு விக்னேஷ் மகேந்திரன் இசை அமைத்துள்ளார்..
இந்த பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ஆதித்யா பாடியுள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததோடு விஜே விஷாலின் படம் ரிலீஸ் ஆகி உள்ளதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரவீந்தர் அந்த போஸ்டரை தன்னுடைய பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் உங்களை பெரிய திரையில் காண ஆவலோடு இருக்கிறேன் நீ எப்பவுமே ஹீரோ தான்டா என்று பதிவிட்டு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…