Categories: சினிமா

விஜய் ஒரு வார்த்தை சொல்லட்டும் இப்ப கூட நான் ரெடியா இருக்கேன்.. ஓபனாக பேசிய பிக்பாஸ் தர்ஷா குப்தா..!

Spread the love

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரத்தியங்கரா தேவி ஆலயத்தில் ஒரு லட்சத்து எட்டு எலுமிச்சம் பழத்தை யாகம் செய்யும் சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலம் தர்ஷா குப்தா பங்கேற்றார். பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒரு லட்சத்து எட்டு எலுமிச்சை பழங்கள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு பிறகு அவை பூஜை செய்யப்பட்டு யாகசாலையில் போடப்பட்டது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டினரும் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தர்ஷா குப்தாவும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தர்ஷா குப்தா, இன்றைய தினம் தூத்துக்குடியில் உள்ள பிரத்தியங்கரா கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு ஒரு லட்சத்து 8 எலுமிச்சை யாகம் நடைபெற்றதில் கலந்து கொண்டேன். இது மிகுந்த மகிழ்ச்சி. இந்த கோவிலில் நினைத்த காரியம் நடப்பதாக கூறுகிறார்கள். அதன் அடிப்படையில் தான் இந்த கோவில் யாகத்தில் கலந்து கொண்டு மக்களை சந்தித்தேன். குக் வித் கோமாளியில் வந்தேன் அடுத்து பிக் பாஸ், அடுத்த லெவலுக்கு முன்னேறி போக வேண்டும் என்பதற்காக வேண்டுதலின் அடிப்படையில் தான் இங்கு வந்தேன். தெலுங்கிலும் தற்போது தமிழில் ஸ்டோரிலும் தான் நடித்து வருகிறேன்.

ஹீரோயின் கதை அம்சம் கொண்ட ஒரு நல்ல படத்திற்காக தான் காத்திருக்கிறேன். எனக்கு கமல் சார் ரொம்ப பிடிக்கும், அதே சமயம் விஜய் சேதுபதியின் பீட்சா படத்தின் தீவிர ரசிகை நான். அவரைப் பார்த்ததே மகிழ்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தது தனக்கு பிடிக்கவில்லை. அங்கு சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டு டாஷ் பண்ணிய பிறகு ரொம்ப மன அழுத்தம் இல்லாமல் சந்தோசமாக இருந்தேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தொடர்ந்து ஆன்மீக சுற்றுப்பயணம் திருச்செந்தூர் கேரளா கோவில் முடித்துவிட்டு தற்போது தூத்துக்குடி வந்துள்ளேன் என்று கூறிய தர்ஷாவிடம் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், சும்மா போய் நின்றாலே அவரது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கூடும். நானும் அவர் அடுத்த முதல்வராக வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். அவர் கட்சி ஆரம்பித்த பிறகு புதிதாக என்ன செய்யப் போகிறார், என்ன புதுசா நடக்கப் போகிறது என்பதை பார்ப்பதில் தனக்கே மிகுந்த ஆர்வமாக உள்ளது. என்னை கட்சியில் சேருமாறு அவர் சும்மா கூப்பிட்டால் கூட போய் சேர்ந்து விடுவேன் என்று தர்ஷா குப்தா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஐடி ஊழியர்களே உஷார்…! குனிந்து வேலை பார்ப்பதால் கழுத்து எலும்பில் தேய்மானமா…? இதோ எளிய தீர்வுகள்…!!

தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…

7 minutes ago

நிதி நெருக்கடி தீரும்; செல்வம் பெருகும்….! யமனின் வக்கிர பெயர்ச்சியால் ஜொலிக்கப்போகும் ராசிகள்… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…

15 minutes ago

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

1 மணத்தியாலம் ago

ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…

1 மணத்தியாலம் ago

“இன்று ஓட்டு போட போறீங்களா?”…. வாக்குச்சாவடிக்கு இதை எடுத்துட்டு போனா 3 மாசம் ஜெயில்?…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…

1 மணத்தியாலம் ago

“சாதிப் பெயரால் ஊருக்கா அவமானம்?”… தமிழகத்தில் இப்படியொரு கிராமமா? 15 ஆண்டு கால போராட்டமும், ஒரு தேர்தலைப் புறக்கணித்த ஊரும்..!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…

1 மணத்தியாலம் ago