அசிங்கப்பட்டதை மறந்துட்டு மீண்டும் விஜய் டிவிக்கு சென்ற நடிகை வினிஷா.. இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசு தாங்க..!

By Mahalakshmi on ஆனி 23, 2024

Spread the love

தான் அசிங்கப்படுத்தியதையும் மறந்து மீண்டும் விஜய் டிவியில் சீரியலில் நடிப்பதற்கு சென்றிருக்கின்றார் நடிகை வினுஷா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அதிலும் பாரதிகண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் வினுஷா. முதலில் அந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ரோஷினி ஹரிப்ரியன் விலகியதை தொடர்ந்து வினுஷா தேவி அறிமுகமானார்.

   

   

அந்த தொடர் முடிவு பெற்ற பிறகு அதே சீரியலில் அடுத்த சீசனிலும் நடித்தார். ஆனால் அந்த சீரியல் அந்த அளவுக்கு வரவேற்பு பெறாத காரணத்தினால் தொடங்கப்பட்ட சில மாதத்திலேயே சீரியல் முடிவுக்கு வந்தது. பிறகு சீரியல் வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து வந்த வினிஷா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் சிறப்பாக விளையாடிய இவரை பலரும் கேலி செய்து வந்தார்கள்.

 

அதிலும் நிக்சன் ஒரு படி மேலே சென்று கலர் மற்றும் உருவத்தை பற்றி பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது. இது பற்றி கம்மல் கேள்வி கேட்க வேண்டும் என வினுஷா வெளியில் இருந்து கேட்டு வந்தார். ஆனால் அது மட்டும் நடக்கவே இல்லை. விஜய் டிவியும் அவர் விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். இப்படி பல அவமானங்களை சந்தித்த பிறகும் நடிகை வினிஷா மீண்டும் விஜய் டிவியில் நடிப்பதற்கு சென்றிருக்கின்றார்.

அதாவது பனி விழும் மலர் வளம் என்கின்ற புதிய தொடரில் நடிக்க இருக்கின்றார் வினிஷா. அந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. அதற்கேற்ற வகையில் கடந்த வாரம் வெளியான ப்ரோமோவும் அதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இருந்தது.

பனிவிழும் மலர்வணம் என்ற சீரியல் அண்ணன் தங்கை மற்றும் அக்கா தம்பிக்கு இருவருக்கும் இடையே இருக்கும் பாச கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் விஜய் டிவியில் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் தான் மோதலும் காதலும் சீரியல் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நேரத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.