Connect with us

CINEMA

ஜோவிகா முதல் விசித்ரா வரை.. பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்ளோவா..? வெளியான தகவல்..!!

பிக் பாஸ் சீசன் 7 பல்வேறு புதுமைகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, வினுஷா, அனன்யா ராவ், ரவீனா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவணன் விக்ரம், ஐஷு, விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், ஜோவிகா, மணி சந்திரா, பூர்ணிமா, மாயா அக்ஷயா உதயகுமார் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகாவுக்கு ரூ.13,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. இதே போல நடிகை அக்ஷயா உதயகுமாருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.15,000 மாயா கிருஷ்ணனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனையடுத்து ஐஷு, யூடியூப் பிரபலமான நடிகை பூர்ணிமா ஆகியோருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படுகிறது.

   

அனனியாராவுக்கு ரூ.12,000 சம்பளமாகவும், பாண்டியன் ஸ்டோர் சரவணன் விக்ரமுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.18000 சம்பளமும் வழங்கப்படுகிறது. இதே போல பாவா செல்லதுரைக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.28,000 சம்பளமும், விஜய் வர்மாவுக்கு ரூ.15,000 சம்பளமும், கூல் சுரேஷுக்கு ரூ.18000 சம்பளமும் வழங்கப்படுகிறது.

இதனையடுத்து மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனுக்கு ரூ.27,000 சம்பளம், நிக்சனுக்கு ரூ.13,000 சம்பளமும், பிரதீப் ஆண்டனிக்கு ரூ.20,000 சம்பளமும், மணிசந்திராவுக்கு ரூ.18,000 சம்பளமும், விஷ்ணுவுக்கு ரூ.25,000 சம்பளமும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக ரவீனாவுக்கு ரூ.18000 சம்பளமும், வினுஷா தேவிக்கு ரூ.20000 சம்பளமும் வழங்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 7- ல் விசித்திரா ஒரு எபிசொடுக்கு ரூ.27,000 சம்பளம் வாங்குகிறார்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top