விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றத்தின் மூலமாக பிரபலமானவர் சம்யுக்தா. இவர் காபி வித் காதல் வாரிசு போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சம்யுக்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, என் கணவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். நான் இங்கிருந்தேன்.
அவர் துபாயில் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பது எனக்கு தெரியவந்தது. அவர் என்னிடம் சரியாக பேச மாட்டார். அந்த வலியை என்னால் மறக்க முடியவில்லை. நான் மன வேதனையில் இருக்கும் போது ஏஞ்சல் மாதிரி என் வாழ்க்கையில் வந்தவர் பாவனா. ஒருமுறை எனது குடும்பம் பற்றியும் எனது கணவர் பற்றியும் பாவனா கேட்டபோது, நடந்தவற்றை கூறி அழுதேன்.
அதன் பிறகு தான் பாவனாவோடு நெருக்கமாக பழக ஆரம்பித்தேன். லாக்டவுன் நேரத்தில் என்ன செய்வது என்று அறியாமல் பாவனாவிடம் புலம்பினேன். அப்போதுதான் அவர் என்னை பிக் பாஸுக்கு பரிந்துரை செய்தார். பாவனாவால் தான் எனது வாழ்க்கையை மாறியது. நான் யார் என்று உலகத்திற்கு தெரிகிறது என மனம் திறந்து பேசியுள்ளார்.