தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகர்களில் ஒருவர் தான் கூல் சுரேஷ். இவர் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட. எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசன்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான்.
இந்த நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியான சரக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் கலந்து கொண்ட நிலையில் அங்கிருந்த தொகுப்பாளரிடம் கழுத்தில் மாலையை போட்டார். உடனே அந்தப் பெண் மேடையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்து தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார்.
இந்த சம்பவம் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான் கூல் சுரேஷ் செய்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவன் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்க வைக்கிறேன் எனக் கூறி மன்னிப்பு கேட்க வைத்தார். இதைத்தொடர்ந்து கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோவில் நான் அந்த சகோதரி மீது விளையாட்டாக மாலையை போட்டேன். அது தவறுதான் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். நான் மிகவும் வறுமையில் தவிக்கிறேன். எனவே யூட்யூபர்ஸ் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்யுங்கள்.
என் Gpay நம்பர் உங்களிடம் இருக்கும். அதற்கு பணம் அனுப்பி ஹெல்ப் பண்ணுங்க. மேலும் மன்சூர் அலி அண்ணா நீங்களும் உங்களால் முடிந்த அளவு எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் கேட்டிருந்தார். தற்பொழுது இவர் இவ்வாறு நடந்து கொண்டது, சர்ச்சையை கிளப்பியது எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லத்தான் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இவர் செய்யும் அட்டகாசங்களை எல்லாம்.