பிக் பாஸ் சீசன் 7-ல் ஐஷு- நிக்சன் மிரர் முத்தம் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கண்ணாடி வழியே நிக்சனும், ஐசுவும் முத்தமிட்டுக்கொண்ட காட்சியை பார்த்தவர்கள் இது என்ன தெலுங்கு பிக் பாஸ் போல இருக்கு என கமெண்ட் செய்கின்றனர். வேறு சிலர் இனிமேல் தான் ஷோ சூடு பிடிக்கும் சொல்லுங்க என ரசிக்கவும் செய்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க ஐஷுவின் பெற்றோர் இந்த முத்த விவகாரத்தில் வருத்தத்தில் உள்ளனர்.
அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நேரடியாக பிக் பாஸ் செட்டிற்கு சென்று விட்டார்களாம். இது குறித்து ஷோ தொடர்புடைய வட்டாரங்கள் பேசியதாவது, ஆமாங்க நீங்க கேள்விப்பட்டது நிஜம்தான். ஐஷுவின் அப்பாவும், அம்மாவும் பிக் பாஸ் வீடு இருக்கிற பூந்தமல்லி இவிபி செட்டுக்கு வந்துட்டாங்க. கண்ணாடி வழியாக ஐஷுவும் நிக்சனும் முத்தம் பரிமாறிக்கிட்ட எபிசோடை பார்த்து அவங்க மனசு உடைஞ்சு போயிருக்காங்க.
குடும்ப மானம் போகுது; இனி ஒரு நாள் கூட இந்த ஷோல எங்க பொண்ணு இருக்க வேண்டாம் தயவு செய்து அவளை வெளியே அனுப்பிடுங்க என்ன அழுகையுடனும், ஆக்ரோஷத்துடனும் நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் அவர்கள் கேட்டார்கள். சேனல் தரப்பில் அவங்களை சமாதானப்படுத்தி அனுப்பியதாக தெரியுது.
எமர்ஜென்சியான காரணம் இல்லாமல் திடீர்னு இங்க வந்து ஒரு போட்டியாளரை கூப்பிட்டு போக முடியாது நீங்க கிளம்புங்க, நாங்க அவங்க கிட்ட பேசுறோம்னு சேனல் தரப்பில் சொல்லி இருக்காங்க. அதனையும் கேட்காமல் ஐஷுவின் பெற்றோர் தங்களது மகளை பார்த்து பேசணும்னு அடம் பிடிச்சிருக்காங்க. சேனல் தரப்பில் போட்டியாளர்களுக்காக விதிமுறைகளை மீறினால் அது தவறு.
ஐஷுவின் அம்மா, அப்பா சொல்ல விரும்பியதை மட்டும் கேட்டு நாங்களே ஐஷுவிடும் சொல்லி எச்சரிப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி இருக்காங்க. அதன் பிறகு அவர்கள் சொன்ன தகவலும் ஐஷுவிடம் அனுப்பப்பட்டிருக்கிறது என கூறியுள்ளனர். இதற்கிடையே ஐஷுவும் நிக்சனும் கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்துக் கொண்ட வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…