விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த 5 வாரங்களாக நடந்து வருகிறது. இதில் திடீர் திருப்பமாக முன்னணி போட்டியாளர்களின் ஒருவராக பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதுவும் பெண்களுக்கு அவரால் பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டில், ரெட்கார்டு காட்டி அவர் வெளியேற்றப்பட்டது, பயங்கர விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கடுமையான கண்டம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீடு குறித்து பல விஷயங்களை அவர் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, பிக்பாஸ் வீடு முதலில் இருந்தது போல் இல்லை. கமல்ஹாசனும் முன்பு போல, சிந்தனையான கருத்துகளை பேசுவதில்லை. பிக்பாஸ் சொன்னபடி, கமல் நடந்துக்கொள்கிறார். வீட்டுக்குள் இன்னும் சிலர் விளையாட ஆரம்பிக்கவில்லை. நல்ல முறையில், சிறப்பாக விளையாடி உண்மையான நடந்துக்கொண்ட பிரதீப்பை, சதி செய்து வெளியேற்றி விட்டனர். அதற்கு உண்மையான காரணம், பிக்பாஸ் சொன்னபடி அவர் எந்த பெண்ணையும் காதலிக்கவில்லை. எந்த பெண்ணுக்கும் நூல் விடவில்லை. அப்படி செய்திருந்தால் பிக்பாஸ் ரேட்டிங் ஏறி இருக்கும். அவரை வீட்டுக்குள் பல வாரங்கள் வைத்திருப்பார்கள்.
மாயா போன்றவர்களை விஷம் தோய்ந்த கத்தி என்கின்றனர். விசித்ரா நடிகை என்ற ஒரே காணத்துக்கான அந்த வீட்டுக்குள் இருக்கிறார். அவர் இதுவரை ஒரு விளையாட்டு கூட விளையாடவில்லை. கமல் அனுப்பிய பவா செல்லத்துரையை பிக்பாஸே வெளியேற்றி விட்டார். விஜய் டிவி சீரியல் போல பிக்பாஸ் மாறிவிட்டது. கவுதமி தன் மகளுக்கு பாதுகாப்பில்லை என்றுதான், கமலை விட்டு பிரிந்தார்.
இதுகுறித்து கமல் எந்த கவலையும் படவில்லை. பிரதீப் என்ற பார்வையாளர்களின் மனம் கவர்ந்த போட்டியாளரை எந்த தவறும் செய்யாதவரை இப்படி கட்டாயமாக வெளியேற்றியதை பலரும் காறி துப்புகின்றனர். இதற்கான பலன் கமல், பிக்பாஸ் இருவருக்கும் கண்டிப்பாக இருக்கும் என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…