சத்தமில்லாமல் 2-வது திருமணத்தை முடித்த பிக்பாஸ் அபிஷேக்.. வைரலாகும் ஜோடியின் புகைப்படங்கள்..!!

By admin on ஆனி 3, 2024

Spread the love

அபிஷேக் ராஜா பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளராக பங்கேற்றார். அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து 21 நாட்களிலேயே அபிஷேக் ராஜா வெளியேறினார். மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்போதும் 63-வது நாளில் அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

   

யூடியூப் சேனலில் அபிஷேக் ராஜா விமர்சகராக இருந்து பிரபலமானார். அதன் பிறகு ஓபன் பண்ணா எனும் youtube சேனலை தொடங்கினார். கமல், விஜய் சேதுபதி, ஏ ஆர் ரகுமான் பேட்டிகளை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கண்ணாவின் நண்பராக அபிஷேக் ராஜா நடித்திருந்தார்.

   

 

பிக் பாஸ் வீட்டில் அவர் பேசும் விதம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர். அபிஷேக் ராஜா தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம் அபிஷேக் ராஜா தனது காதலியை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தினார். அவரது பெயர் சுவாதி நாகராஜன். இன்று சத்தமே இல்லாமல் அபிஷேக் ராஜா தனது காதலி சுவாதி நாகராஜனை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title