2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை பாகம் ஒன்று. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். அதோடு விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
முதல்முறையாக சூரி கதாநாயகனாக களமிறங்கிய இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக தான் அமைந்தது. அதுமட்டும் இல்லாமல் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்புவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படமாக இது அமைந்து சூரிக்கு கூடுதல் பெருமையை சேர்த்தது.
இந்நிலையில் படத்தின் இயக்குனரான வெற்றிமாறன் சூரி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் அதன் பின் படத்தின் கதையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியபோது படத்தை பெரிய அளவில் எடுக்க நினைக்கவில்லை என்றும் எளிய மக்களை வைத்து அவர்களது அன்றாட வாழ்க்கை எப்படி செயல்படுகிறது.
ஒவ்வொரு நாளையும் எவ்வளவு எளிமையாக எப்படி கடக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து தான் படத்தை எடுக்க நினைத்ததாக கூறியுள்ளார். அதனால் தான் அவர் சூரியை தேர்ந்தெடுத்தாராம் ஆனால் சூரியுடன் பேசிய பிறகு கதையில் புதிய மாற்றத்தை வெற்றி மாறன் கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
சூரி பார்ப்பதற்கு புதிதாக காவல் துறையில் சேர்வதற்கு பயிற்சி எடுக்கும் இளைஞரை போன்ற இருப்பதால் அதற்கேற்றார் போல் கதையை மாற்றி அமைத்துள்ளார். இப்படி சூரியால் மாற்றப்பட்ட கதைதான் வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.