பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்.. குடும்பத்தினர் சொன்ன பகிர் தகவல்..!

By Mahalakshmi on சித்திரை 29, 2024

Spread the love

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிஹார் மாநிலம் பகல்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குடியிருப்பில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் அம்ரிதா இருந்தார்.

   

அவரது சகோதரி அம்ரித்தாவின் அறைக்கு மாலை 3:30 மணிக்கு சென்றிருந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார் .பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சில படங்களில் நடித்துள்ள அம்ரிதா பாண்டே பல வெப் சீரிஸ்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.

   

 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரதிஷோத் வெப் சீரியஸ் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமா வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர் தற்கொலை முடிவு எடுத்துள்ளார். மேலும் அவர் இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தனது whatsappபில் ‘இரண்டு படகுகளில் வாழ்க்கை உள்ளது. அப்படி ஏன் பயணிக்க வேண்டும். அதற்கு படகை மூழ்கடித்து என்னுடைய பாதையை எளிமையாக்கி கொள்ளலாம்’ என்று ஸ்டேட்டஸ் வைத்திருக்கின்றார்.