Connect with us

CINEMA

நடிகர் விஜயுடன் மோதும் பாரதிராஜா.. தெறிக்க போகும் தியேட்டர்கள்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும், பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது.

   

நேற்று லியோ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் முழு படத்தையும் பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதே போல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் முதல் முறையாக மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஷாம் செல்வன், நக்ஷா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா பிக்சர்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்து வில்லனாக நடித்துள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வருகிற அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி மார்கழி திங்கள் படம் ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் அறிவித்துள்ளனர். லியோ ரிலீஸான மறுநாள் மார்கழி திங்கள் படம் திரைக்கு வர உள்ளது. முன்னணி பிரபலங்களான விஜய் மற்றும் பாரதிராஜாவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவதால் இரண்டு படங்களுமே ரசிகர்களிடைய மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top