Connect with us

CINEMA

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா.. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் சூறையாடப்பட்ட ரோகிணி தியேட்டர்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் திரிஷா இணைந்து நடித்த படம் லியோ இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது.

   

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று லியோ படத்தின் ட்ரெய்லர் மாசாக வெளியானது. சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் லியோ பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் முன்பு நின்று லியோ, லியோ என சத்தம் போட்டு உள்ளனர்.

இந்நிலையில் ட்ரெய்லரை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் தியேட்டர் நாற்கா லிகள்மீது ஏறி நின்றும், நாற்காலிகளைக் கிழித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நிமிடங்களில் தியேட்டரே கலவர இடம் போல மாறியது. இதனால் ரோகிணி தியேட்டருக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த கோயம்பேடு போலீசார் தியேட்டருக்கு சென்ற உடைந்த நாற்காலிகளை பார்வையிட்டனர்.

தியேட்டர் முழுவதும் ரசிகர்களின் செருப்புகளும், பள்ளி கல்லூரி மாணவர்களின் புத்தகங்களும் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. பெரும்பாலான நாற்காலிகள் உடைந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இதே ரோகிணி தியேட்டரில் தான் விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் திரையிடப்பட்டது. அப்போதும் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top