தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 16 வயதினிலே. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்த நிலையில் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் உருவானபோது உதவி இயக்குனராக பாக்கியராஜ் பணியாற்றியுள்ளார். அப்போது படத்தின் சீன் பேப்பரை படித்துள்ளார். அவரிடம் பாரதிராஜா என்னையா சீன் படிச்சியா நல்லா இருக்கா என்று கேட்டுள்ளார்.

உடனே பாக்கியராஜ் சூப்பரா இருக்கு சார் என்று கூற முதல் படம் என்று சொல்லாத உனக்கு என்ன தோணுதோ அதை சொல் என்று பாரதிராஜா கேட்க இல்ல சார் நல்லா தான் இருக்கு என்று பாக்கியராஜ் கூறியுள்ளார். மேலும் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று பாக்கியராஜ் கூறிய பிறகு உனக்கு என்ன தோணுது ஏதாவது தோன்றினால் சொல்லு என்று சொல்ல எனக்கு ஒன்னு தோணுது சார் என்று பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் கூறியுள்ளார். அதாவது இந்த படத்தில் கமல்ஹாசன் பெயர் சப்பானி, ஆனால் அவர் சாதாரணமாக மயிலு நான் சந்தைக்கு போயிட்டு வரேன் உனக்கு ஏதாவது வேண்டுமா என்று சொல்கிறார்.
/indian-express-tamil/media/media_files/FCqheBKMHHUinU9sm8cu.jpg)
இது சரி இல்லை. சப்பானி என்ற பெயருக்கு தகுந்த மாதிரி அவர் சற்று குளறியபடி பேசினால் தான் சரியாக இருக்கும் என்று பாக்கியராஜ் கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட பாரதிராஜா பாக்யராஜை மூன்று சீன்கள் குளறுபடி பேசுமாறு கூறியுள்ளார். அவரும் அப்படியே பேச அதை சூப்பர்யா சப்பானி கேரக்டரை இப்போதுதான் சரியா இருக்கு என்று பாரதிராஜா சொல்ல படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் கையில் சீன் பேப்பரை கொடுத்து டேக் எடுத்த போது கமல்ஹாசன் சாதாரணமாக பேசியுள்ளார். இதனை பார்த்த பாரதிராஜா பாக்யராஜை பார்த்துவிட்டு ஒன்ஸ்மோர் என்று கூறியுள்ளார்.

திரும்பவும் கமல்ஹாசன் அப்படியே பேச பாரதிராஜா பாக்யராஜ் ஐ பார்த்துவிட்டு ஒன்ஸ்மோர் என்று கூறியுள்ளார். உடனே கமல்ஹாசன் நீங்கள் அடுத்து எடுத்தாலும் நான் அதையே தான் பேசுவேன் என்ன பிரச்சனை சொல்லுங்க என்று கேட்க பாக்கியராஜ் சொன்னதை பாரதிராஜா கமல்ஹாசனிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட கமல்ஹாசன் பாக்கியராஜ் தனியாக அழைத்துச் சென்று நடித்துக் காட்டுமாறு கூறியுள்ளார். அதனைப் போல மூன்று சீர்களை பாக்கியராஜ் நடித்து காட்ட புரிந்து கொண்ட கமல்ஹாசன் சப்பானியாக சிறப்பாக நடித்துள்ளார். அன்று பாரதிராஜா சப்பாணி குரலை மாற்றுயதால் தான் படமே சூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.
