90களில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. இவருடைய பல படங்கள் முன்னாடி ஹீரோக்களுடன் அமைந்தது. விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல வெற்றி படங்களை கொடுத்த இவர் கவர்ச்சியுடன் நடிப்பையும் மிக்ஸ் செய்து கொடுத்தவர். அதிலும் குறிப்பாக இவருடைய தொடையழகு ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டது. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இவருடைய என்ட்ரி மிக சிறப்பாக அமைந்தது. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய ரம்பா அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ள நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் நடிப்பில் ஈடுபடவில்லை. திருமணம் ஆகி குடும்பம் மற்றும் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். தன்னுடைய கணவரின் பிசினஸில் உறுதுணையாக இருந்து வருகின்றார். சமீபத்தில் நல்ல கதை அமைந்தால் மீண்டும் தமிழில் நடிப்பேன் என ரம்பா தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் ரம்பா சமீபத்தில் அளித்த பேட்டியில் உன்னை நினைத்து திரைப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் குஷ்பு மற்றும் சுந்தர் சி உடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், சுந்தர் சி சார் இயக்கத்தில் உன்னை நினைத்து படபிடிப்பு நடந்த சமயத்தில் முதல் நாள் நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அப்போது யாரு டைரக்டர் யாரு கேமராமேன் என்று எனக்கு யாரோட பேரும் தெரியல அடையாளமும் தெரியல. அந்த சமயத்துல செந்தில் சார் கீழ பேனாவை வைத்துக்கொண்டு நின்னுட்டு இருந்ததால் அவர்தான் டைரக்டர் என்று நினைத்து குட் மார்னிங் டைரக்டர் சார் என்று சொன்னேன். அவரும் குட் மார்னிங் என்று சொல்லிட்டாரு. உடனே ட்ரெயின் மேல அமர்ந்து கொண்டு இருந்த சுந்தர் சி சார் தான் கேமராமேன் என்று நினைத்து குட் மார்னிங் கேமரா மேன் என்று சொன்னதும் அவரும் குட் மார்னிங் சொன்னாரு. எனக்கு யாரையும் தெரியல என்று தெரிந்து கொண்ட அவங்க அப்படியே ஒரு வாரம் மெயின்டைன் பண்ணாங்க.

நானும் ஒரு வாரத்துக்கு யாருனே தெரியாம கேமராமேன் டைரக்டரை மாறி மாறி புரிஞ்சுகிட்டு இருந்தேன். ஒரு நாள் அங்கு மற்றொரு படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது குஷ்பு மேடம் வந்தாங்க. அப்போ அவங்க டைரக்டர் கல்யாணம் பண்ணி இருக்காங்க என்று தெரிந்ததும் செந்தில் சார் தான் என்று நினைத்துக்கொண்டு அவங்க கிட்ட பேசிட்டு இருந்த. அப்போதான் நீ என்ன இவங்கள சொல்ற அங்க பாரு மேல உக்காந்துட்டு இருக்காரு அவர்தான் என்னோட புருஷன் என்று சொன்னார்கள். ஐயோ அவர் கேமராமேன் நீங்க டைரக்டரை தான கல்யாணம் பண்ணி இருக்கீங்க என்று நான் சொன்னதும் அங்க இருந்த எல்லோரும் சிரிச்சாங்க.
/indian-express-tamil/media/media_files/2025/03/19/LAOI4EYnf83ACcGKj5lb.jpg)
உனக்கு ஒன்னும் தெரியலன்னு இத்தனை நாள் இவங்க இன்னும் வச்சு காமெடி பண்ணிட்டு இருந்திருக்காங்க என்று குஷ்பு மேடம் சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாமே புரிஞ்சது. அதனைப் போலவே கவுண்டமணி சாரை அந்த படத்துல முதல் ஷாட்டில் நான் ஆங்கிலத்தில் பேசி திட்ட வேண்டும். நானும் அதே மாதிரி செய்ததும் அவர் எனக்கு தமிழ் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதுதான் நான் நன்றாக தமிழ் பேசியதும் அட இந்த பொண்ணு நல்லா தமிழ் பேசுதே என்று சொல்லி சிரிச்சாரு என உன்னை நினைத்து படப்பிடிப்பின் போது நடந்த அனுபவத்தை ரொம்ப பகிர்ந்து உள்ளார்.
