Connect with us

அஜித் படத்தை நிறுத்த நினைத்த பாரதிராஜா… நூலிழையில் தப்பிய S J சூர்யா… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

CINEMA

அஜித் படத்தை நிறுத்த நினைத்த பாரதிராஜா… நூலிழையில் தப்பிய S J சூர்யா… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார். 2000 களின் இறுதிவரை அவரது படங்கள் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் எப்படி கோலோச்சினார்களோ அது போல அவரிடம் பணியாற்றிய உதவி இயக்குனர்களும் வெளியே வந்து படம் பண்ணி அவருக்குப் பெருமை சேர்த்தனர். அந்த வரிசையில் பாக்யராஜ், மனோ பாலா, பொன்வண்ணன், சீமான், எஸ் ஜே சூர்யா என மிகப்பெரிய பட்டியலே நீளும்.

   

எஸ் ஜே சூர்யா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக முதலில் வேலை செய்தாலும் பின்னர் வசந்த், லிவிங்ஸ்டன் உள்ளிட்டவர்களிடம் இணைந்து வேலை செய்தார். எஸ் ஜே சூர்யா வாலி படத்தை அஜித்தை வைத்து இயக்க ஒப்பந்தம் ஆனபோது தமிழ் சினிமா உலகில் பெப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனை உருவானது.

   

அதனால் ஒன்றரை ஆண்டுகள் ஷூட்டிங் எதுவும் நடக்காமல் இருந்தது. அப்போது அஜித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். தயாரிப்பாளர்கள் தரப்பில் பாரதிராஜா தீவிரமாக இயங்கினார். அதனால் அஜித் மீது பாரதிராஜா உள்ளிட்டவர்களுக்குக் கோபம் இருந்தது.

 

இந்நிலையில் பாரதிராஜாவிடம் யாரோ ஒருவர் “எஸ் ஜே சூர்யா உங்கள் சிஷ்யன்தானே, அவனை அழைத்து இந்த படத்தைத் தொடங்க கூடாது என சொல்லுங்கள்” என சொல்லிவிட்டார்களாம். அதை ஏற்றுக்கொண்ட பாரதிராஜாவும் எஸ் ஜே சூர்யாவை தன்னைப் பார்க்க வரசொல்லிவிட்டாராம்.

விஷயம் தெரியாமல் எஸ் ஜே சூர்யாவும் பாரதிராஜாவைப் பார்க்க வந்து காத்திருந்துள்ளார். அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த, தற்போது நடிகராக அறியப்படும் கவிதா பாரதி அவரிடம் முழு விஷயத்தையும் சொல்லி “பாரதிராஜாவை இப்போது சந்தித்தீர்கள் என்றால் உங்கள் படம் தொடங்காது. வாழ்க்கை போய்விடும். பேசாமல் திரும்பி சென்றுவிடுங்கள். நீங்கள் படம் பண்ணி வெற்றி பெற்றால், அதன் பின்னர் அவர் கோபம் சரியாகிவிடும்” என சொல்லி அனுப்பி விட்டாராம். ஒருவேளை அன்று இருவரின் சந்திப்பும் நடந்திருந்தால் வாலி படம் தொடங்கப்படாமலேயே கூட போயிருக்கும் என சமீபத்தில் அளித்த நேர்காணலில் கவிதாபாரதி கூறியுள்ளார்.

More in CINEMA

To Top