CINEMA
தமிழ் சினிமாவில் நான் வியக்கும் மூனு பேரு இவங்கதான்… நடிகர் விஜய்யின் டேஸ்ட் வேற மாதிரில்ல இருக்கு..!
தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
2000 களில் தன்னுடைய ரூட்டைக் கண்டுபிடித்து கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களாக நடித்துத் தள்ளினார். அதன் பயனாக இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கிறார். ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு அவரின் மாஸ் தற்போது உயர்ந்துள்ளது.
விஜய் என்னதான் மாஸ் மசாலா படங்களாக நடித்துத் தள்ளினாலும், அவருக்கு எதார்த்தமான உயிரோட்டமுள்ள படங்களின் ரசிகராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தமிழ் சினிமாவில் தான் வியக்கும் மூன்று ஆளுமைகள் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் “எனக்கு இளையராஜா, மணிரத்னம் மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆகிய மூன்று பேர் மீது எப்போதும் மிகப்பெரிய வியப்பு உள்ளது” என்று கூறியுள்ளார். நடிப்புத்துறையில் தனக்கு முன்னோடியாக அமைந்த ரஜினிகாந்தின் பெயரை சொல்லாமல் இவர்களின் பெயரை சொல்லியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது.