Connect with us

‘என் அப்பா மிக மோசமான நடிகர்… நான் நடிப்பைக் கத்துகிட்டது அவர்கிட்டதான்’.. விக்ரம் பகிர்ந்த தகவல்

CINEMA

‘என் அப்பா மிக மோசமான நடிகர்… நான் நடிப்பைக் கத்துகிட்டது அவர்கிட்டதான்’.. விக்ரம் பகிர்ந்த தகவல்

தமிழ் சினிமாவில் இன்று டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். அவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான் தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் விக்ரம் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதிகமாக மெனக்கெடுபவர். கெட்டப்புகளை மாற்றி உடல் எடையை ஏற்றி இறக்கி வருடக்கணக்கில் அர்ப்பணிப்புடன் நடிப்பவர்.

விக்ரம் பற்றி இன்று பலருக்கும் தெரிந்திருக்கும் நிலையில், அவரின் அப்பா வினோத் ராஜும் ஒரு நடிகர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் கில்லி மற்றும் திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் ராஜ் பரமக்குடியில் பிறந்தவர். இவருக்கு மூன்று மகன்கள் உண்டு. அதில் ஒருவர் தான் விக்ரம். வினோத் ராஜின் மனைவி ராஜேஸ்வரியின் சகோதரர்தான் நடிகர் தியாகராஜன். அவர் நடித்த மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில்தான் வினோத் ராஜ் நடிகராக அறிமுகமானார்.

   

அதன் பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான கொடி பறக்குது படத்திலும் ஒரு நல்ல வேடத்தில் நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் சினிமாவுக்கு மிகப்பெரிய இடைவெளி விட்டார். அதன் பின்னர் அவர் நடித்த படம் கில்லிதான். அதில் திரிஷாவின் அப்பாவாக நடித்திருப்பார். அதன் பின்னர் திருப்பாச்சி, திருட்டுப் பயலே, மதராசி, தம்பி, மனதோடு மழைக்காலம், மாயக்கண்ணாடி, மச்சக்காரன், சத்தியம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் பல படங்களில் நடித்து வந்தாலும் விக்ரம்மோடு கந்தசாமி படத்தில் மட்டும் இணைந்து நடித்தார்.

   

அரவான் அவரின் கடைசிப் படமாக அமைந்தது. உடல் நலக் குறைவு காரணமாக 2017 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தன்னுடைய அப்பா பற்றி விக்ரம் பேசியுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

 

அதில் “என் அப்பா பிறந்த ஊர் கமல் சார் பிறந்த பரமக்குடிதான். என் அப்பாவின் அப்பா ஒரு பள்ளி தலைமையாசிரியர். அவரிடம் இருந்து தப்பிதான் என் அப்பா நடிப்பாசையில் சென்னைக்கு ஓடிவந்தார். ஆனால் அவர் ஒரு மோசமான நடிகர்.. இதை அவர் கேட்டுக் கொண்டு இருக்கலாம். அவரால் நடிப்பின் மூலம் தன் வாழக்கையை நடத்தமுடியவில்லை. ஆனால் அவரிடம் இருந்த அந்த ஆசைதான் எனக்கும் துருவுக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

More in CINEMA

To Top