செய்யாத தப்புக்கு நான் ஏன் திட்டு வாங்கணும்… லெட்டர் எழுதி வச்சிட்டு கிளம்பிய பாக்யராஜ்… பாரதிராஜாவின் ரியாக்‌ஷன்!

By vinoth on ஜூலை 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.

   

பாக்யராஜ் இயக்குனர் ஆவதற்கு முன்னர் 77 ல் இருந்து 80 வரை பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். அப்போது பாரதிராஜா கொடுத்த சூப்பர் ஹிட் படங்களுக்கு பாக்யராஜின் உதவியும் முக்கியக் காரணமாக அமைந்தது. 16 வயதினிலே திரைப்படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்களை பாக்யராஜ் சொல்லியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிவப்பு ரோஜாக்கள் படத்துக்கு வசனம் எழுதியதும் பாக்யராஜ்தான்.

   

இப்படி குரு சிஷ்யனாக இரண்டு பேரும் இருந்தாலும், அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வந்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாவற்றையும் சரியாக செய்துவிட்டு, இயக்குனரை அழைக்க பாக்யராஜ் சென்றுள்ளார். ஆனால் யூனிட்டில் இருந்த ஒரு எலக்ட்ரீசியன் சம்பள பாக்கிக்காக ஃப்யூஸ் கேரியரைப் புடுங்கி சென்றுவிட ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாம். அதனால் கடுப்பான பாரதிராஜா, பாக்யராஜை கடுமையாக திட்டிவிட்டாராம்.

 

இதனால் கோபித்துக் கொண்ட பாக்யராஜ், ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். இனிமேல் சினிமாவே வேண்டாம் என்ற முடிவையும் எடுத்தாராம். ஆனால் நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் பாரதிராஜாவிடம் அழைத்து வந்துள்ளனர். அப்போது பாரதிராஜா “உன்னை திட்ட எனக்கு உரிமை இல்லையாடா” எனக் கேட்டதும் எமோஷனல் ஆகி கண்கலங்கி விட்டாராம் பாக்யராஜ்.