Connect with us

CINEMA

என் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தது ஜெயலலிதாதான்.. பாரதிராஜா பகிர்ந்த சீக்ரெட்!

தமிழ் சினிமாவின் வரவு அதுவரை இருந்த கிளிஷேக்களை அடியோடு மாற்றிவிடும். அப்படி வந்த ஒரு சில கலைஞர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட அதுபோன்ற ஒரு படம் அதற்கு தமிழ் சினிமா ரசிகனுக்கு திரையில் காணக் கிடைக்கவே இல்லை.

16 வயதினிலே படத்துக்கு பின்னரும் கிழக்கே போகும் ரயில், மண்வாசணை, வேதம் புதிது, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா என பல படங்களை எடுத்து இன்று தமிழ் சினிமா ரசிகர்களால் இயக்குனர் இமயம் என கொண்டாடப்படுகிறார் பாரதிராஜா.

   

தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னர் கூட அவர்  முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார்.  அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.

இந்நிலையில் அவர் பகிர்ந்துள்ள ஒரு தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 16 வயதினிலே படத்துக்கு முன்பாகவே தான் ஒரு பெண்ணை மையமாக வைத்து ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்ததாகவும், அந்த கதையை அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம்தான் சொன்னதாகவும் கூறியுள்ளார்.

அந்த கதை பிடித்துப் போக, ஜெயலலிதாவும் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் தொடங்கப்படவில்லையாம். அதன் பிறகுதான் அவர் 16 வயதினிலே படத்தை இயக்கியது. ஆனால் அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து தான் ஜெயலலிதாவுக்கு சொன்ன கதையில் சில மாற்றங்கள் செய்து ‘புதுமைப் பெண்’ என்ற பெயரில் எடுத்தாராம். அந்த படத்தில் ரேவதி கதாநாயகியாக நடித்திருந்தார்.

Continue Reading

More in CINEMA

To Top