மண் வாசனை படத்தில் பாரதிராஜா எடுத்த முடிவால் பயந்து போன தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்… அதற்கு என்ன காரணம்னு அவரே பகிர்ந்த தகவல்!

By vinoth on ஆவணி 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார்.  அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அதற்குக் காரணம் முன்னணி நடிகர்களை போட்டால் அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.

   

அப்படி அவர் மண்வாசனை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் நடிகர் பாண்டியன்.  மண்வாசனை படத்துக்காக நடிகர் தேர்வு நடந்த போது எதேச்சையாக ஒரு கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனைப் பார்த்து தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா. பாரதிராஜா எத்தனையோ புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் அவர்கள் எல்லாம் சினிமா பற்றி தெரிந்தவர்கள். ஆனால் பாண்டியன் சினிமா பரிச்சயம் இல்லாதவர்.

   

இந்த முடிவைப் பாரதிராஜா எடுத்ததும் அந்த படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் பயந்து போய்விட்டாராம். அதைக் குறிப்பிட்டு பேசிய அவர் “எனக்கு பாரதிராஜா மேல் நம்பிக்கை இருந்தது. ஆனால் எங்கோ கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருக்கும் ஒருவரை ஹீரோ என்றதும் கொஞ்சம் பயமாகதான் இருந்தது” என பாரதிராஜாவுடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் அனைவரின் பயத்தையும் பொய்யாக்கும் விதமாக பாண்டியன் அந்த படத்தில் வீரண்ணா கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்து நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றார். அதன் பின்னர் அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.