Connect with us
Bondamani

CINEMA

நடிகர் போண்டா மணி மறைவுக்கு காரணம் இதுதானா? – பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

காமெடி நடிகர் போண்டா மணி, தமிழ் சினிமாவில் 270 படங்களுக்கு மேல் நடித்தவர். அவர் முதன்முதலாக சினிமாவில் அறிமுகப்படுத்தியது நடிகர் பாக்யராஜ். பவுனு பவுனுதான் என்ற படத்தில்தான் போண்டாமணி முதன் முதலாக நடித்தார். இலங்கையில் இருந்து அகதியாக வந்த அவர், சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால், அப்படியே நிரந்தரமாக தங்கிவிட்டார். காஸ்ட்யூமர் ஒருவரது மகளை போண்டாமணி திருமணம் செய்தார். அவருக்கு மகன், மகள் உள்ளனர். மகள் கல்லூரியில் படித்து வருகிறார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த போண்டா மணி தனது 60வது வயதில் நேற்று காலமானார்.

   

இதுகுறித்து நடிகர் பயில்வான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, போண்டாமணி சிறந்த காமெடி நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் நடிப்பு மூலம் நிறைய வருமானம் கிடைத்தும், அந்த பணத்தை அவர் சேமிப்பு செய்யாமல், சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டார். அவரது மனைவி உடல் பருமனாக, நிரந்தர நோயாளியாக இருந்தார். அதனால், வீட்டில் சமைக்கும் பழக்கம் இல்லை. எப்போதும் ஓட்டலில்தான் போண்டா மணி சாப்பிடுவார். அவரது குடும்பத்துக்கும் ஓட்டலில் உணவு வாங்கிக் கொடுத்து விடுவார். எப்போதும் அவர் ஓய்வெடுக்க மாட்டார். ஷூட்டிங், கலை நிகழ்ச்சி என்று சென்றுக்கொண்டே இருப்பார். ஒருமுறை ஷூட்டிங்கில் இருந்த போது, சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு வருமாறு போண்டாமணியை அழைத்தனர். ஆனால் அவர் திருநெல்வேலியில் முக்கியமான வேலை இருக்கிறது. அங்கு நான் கட்டாயம் சென்றே ஆக வேண்டும். அதனால் மருத்துவமனையில் அட்மிட் ஆக முடியாது என்று கூறிவிட்டார்.

போண்டாமணியை பொருத்த வரை பணத்தை சேமித்து வைக்கவில்லை. வாடகை வீட்டில்தான் குடும்பத்துடன் வசித்தார். ஆனால் அதிமுக பேச்சாளராக அதிமுக பிரசார மேடைகளில் தொடர்ந்து பேசி வந்தார். அவரது குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ஏதேனும் நிதியுதவி அளித்து உதவ வேண்டும். அதே போல் நடிகர் சங்கம் சார்பிலும் உதவ முன்வர வேண்டும். போண்டா மணி இறப்பதற்கு முந்தைய நாள் டயாலைசிஸ் செய்ய மருத்துவமனைக்கு சென்றிருக்க வேண்டும். அவரது மகன், டயாலைசிஸ் செய்ய மருத்துவமனைக்கு செல்லலாம் என்று போண்டாமணியிடம் கூறியிருக்கிறார். ஆனால், நாளைக்கு போய் டயாலைசிஸ் செய்து கொள்ளலாம் என போண்டாமணி அலட்சியமாக மறுத்துள்ளார். அன்று இரவே மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். ஒருவேளை அவர் அன்று டயாலைசிஸ் செய்திருந்தால், இன்று நம்மோடு இருந்திருப்பார். அதுதான் அவரது இறப்புக்கு காரணம், என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top