‘நீ எல்லாம் எப்படிடா சினிமாவுக்கு வந்த’ன்னு கேட்ட பாரதிராஜாவை.. ‘இவன்தான் என் பேர காப்பாத்தப் போறான்னு’ சொல்ல வச்ச பாக்யராஜ்!

By vinoth on மார்ச் 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.

   

அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.

   

 

இந்நிலையில் பாக்யராஜ் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சினிமாவில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசியுள்ளார். அதில் “நான் சினிமாவுக்கு வரும் தொழில்நுட்ப ரீதியாக அடிப்படையான சில விஷயங்கள் கூட தெரியாமல்தான் வந்தேன். அப்போதெல்லாம் பாரதிராஜா சார் “டேய், நீயெல்லாம் எப்படிடா சினிமாவுக்கு வந்த?” எனத் திட்டுவார்.

ஆனால் நான் அதே நேரத்தில் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வைராக்கியமாகக் கொண்டு எல்லா வேலைகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதே காலகட்டத்தில் ஒரு நாள் பாரதிராஜா “ இவன்தாண்டா என் பேரைக் காப்பாத்தப் போற சிஷ்யன்” என ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லார் முன்னாடியும் சொன்னார். அன்று எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.