குறைந்த முதலீட்டில் ரூ.15 லட்சம் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்… இதோ முழு விவரம்..!

By Nanthini on பங்குனி 8, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருமே நிம்மதியான எதிர்கால வாழ்வுக்கு திட்டமிட சேமிப்பு என்பது அவசியமாகும். தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவதால் ஆயிரத்தில் சம்பாதித்தாலும் சரி லட்சத்தில் சம்பாதித்தாலும் சரி அதில் குறிப்பிட்ட பணத்தை திட்டமிட்டு சேமித்து வைத்திருப்பது அவசியம். இந்த நிலையில் நல்லா லாபம் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம் குறித்து இதில் பார்க்கலாம். அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மக்களுக்காக ஏராளமான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பணத்தை சேமிப்பதற்கு தபால் அலுவலகங்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த முதலீட்டில் இந்தியாவில் வசிக்கக்கூடிய எந்த ஒரு நபரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.

   

குறைந்த டெபாசிட்டுக்கு லாபத்தை வாரி வழங்கும் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் போஸ்ட் ஆபீஸ் இல் உள்ளது. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகளை விட அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் வரிசலுகையும் அதிகமாக கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து 15 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். போஸ்ட் ஆபீஸ் வைப்பு நிதி திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் டெபாசிட் செய்ய வேண்டும்.

   

 

தற்போது ஐந்து வருடம் முதலீட்டுக்கு தபால் அலுவலகத்தில் 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யும் போது வட்டியாக 2,24,974 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் முதிர்வுக்குப் பிறகு ரிட்டனாக 7,24,974 ரூபாய் தொகை முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை எடுக்காமல் தொடர்ந்து வங்கிக் கணக்கில் தக்க வைக்கும் போது லாபமும் அதிகரிக்கும். அதாவது பத்து ஆண்டுகள் நீட்டிக்கும் போது வட்டி மட்டுமே 5,51,175 ரூபாய் வரை கிடைக்கும்.

இதன் மூலம் டெபாசிட் தொகையுடன் சேர்த்து மொத்தமாக 10,51,175 ரூபாய் முதுகு காலத்திற்குப் பிறகு உங்களுக்கு கிடைக்கும். இதனைத் தொடர்ந்து வைப்பு நிதியாக மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு வட்டி மட்டுமே சுமார் 10,24,149 ரூபாய் கிடைக்கும். இதன் மூலமாக மொத்தமாக 15,24,149 ரூபாய் முதிர்வு துகையாக பெற்றுக் கொள்ளலாம். இப்படி போஸ்ட் ஆபீஸ் வைப்பு நிதி திட்டத்தில் ஐந்து லட்சத்தை வைத்து வருமானமாக 15 லட்சத்திற்கும் அதிகமாக முதலீட்டாளர் பெற்றுக் கொள்ள முடியும்.