சீரியல் நடிகை நேஹா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்த சீரியல் நேஹாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேஹாவுக்கு சாஹிதி என்ற தங்கை உள்ளார். இருவருக்கும் 19 வயது வித்தியாசம். பலரும் வாழ்த்து தெரிவித்தாலும் விமர்சனமும் சோசியல் மீடியாவில் எழுந்தது.
சமீபத்தில் நேஹா அளித்த பேட்டியில் கூறியதாவது, பாப்பா பொறந்துட்டான்னு நியூஸ் போட்டதிலிருந்து சோசியல் மீடியால நிறைய பேர் பேசுனாங்க. எனக்கு என் ஃபேமிலிய அது பாதிக்க கூடாது. ஆனா நான் எல்லாத்தையும் கடந்து வந்து இருக்கேன். விமர்சனங்கள் யாருக்குமே பெருசா தெரியல. எதுகுன்னா பாப்பா எங்க கூட இருந்தா. எல்லாரும் நீ அவளுக்கு அம்மா மாதிரி இருக்க அப்படின்னு சொல்லுவாங்க.
அவ என் பொண்ணு மாதிரி தான். என்னோட முதல் குழந்தை அவ தான். எவ்ளோ அப்செட்டா இருந்தாலும், எவ்ளோ கோவமா இருந்தாலும், அது எங்களை எவ்வளவு அழ வைத்திருந்தாலும், வீட்டுக்கு போய் பாப்பாவ பார்க்கும்போது எதுவுமே பெருசா தெரியாது. அவளுக்காக எதையுமே ஃபேஸ் பண்ணலாம் என்று தோணும். எங்க வீட்ல எங்க ஃபேமிலில இருக்க எல்லார் வாழ்க்கையையும் பாப்பா பெட்டர் ஆக்கி இருக்கா என பேசியுள்ளார்.