ரூ. 24,000 கோடி மதிப்புள்ள அரண்மனையில் வசிக்கும் இந்திய பெண்மணியைப் பற்றி தெரியுமா…? அம்பானி வீட்டை விட 20 மடங்கு பெருசாம்…

By Meena on செப்டம்பர் 19, 2024

Spread the love

இந்தியாவிலேயே மிகவும் பெரிய பணக்காரர் என்றால் அது அம்பானி தான். அவருடைய வீடு தான் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புகளில் கூறப்படுகிறது. ஆனால் அம்பானியை விடவும் பல மடங்கு பெரியதாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ள ஒரு வீட்டின் முன்னாடி அம்பானி வீடு எல்லாம் குடிசை மாதிரி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி ஒரு மிகப்பெரிய அரண்மனை இந்தியாவில் இருக்கிறது.

   

அம்பானியின் வீட்டையும் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையை காட்டிலும் நான்கு மடங்கு பெரியது லட்சுமி விலாஸ் அரண்மனை. இந்த அரண்மனை குஜராத்தில் உள்ளது பரோடா குடும்பத்திற்கு இந்த அரண்மனை சொந்தமாகும். இதுதான் உலகிலேயே மிகப்பெரிய தனியார் குடியிருப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சரித்திர சிறப்பு வாய்ந்த அரண்மனை ஒரு காலத்தில் ஆண்டு வந்த கெய்க்குவாடுகளுக்கு சொந்தமானது.

   

தற்போது ஹெச் ஆர் எச் சமர்சிங் கெய்க்குவார்டு மற்றும் அவரது மனைவி ராதிகா ராஜீ கெய்க்குவார்டு பொறுப்பில் இந்த அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை சுமார் 3,04,92,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த லட்சுமி விலாஸ் அரண்மனையில் 170 அறைகள் ஒரு கோல்ப் மைதானம் ஆகியவை இருக்கிறது.

 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு 48 ஆயிரத்து 750 சதுரையில் மட்டும் தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது ஆகும். 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த அரண்மனை இன்று வரை கட்டப்பட்ட மிகப்பெரிய தனியார் குடியிருப்பாகும். குஜராத்தில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான மன்னர் கால அரண்மனை அதன் விரிவான உட்புறங்கள் நன்கு பராமரிக்கப்பட்ட மொசைகுகள் சரவிளக்குகள் மற்றும் கலை படைப்புகள் ஆயுதங்கள் மற்றும் கலைகளின் மிகவும் ஈர்க்கக்கூடிய தொகுப்பு ஆகியவற்றை இந்த அரண்மனை கொண்டுள்ளது.

இந்த அரண்மனை 1890 இல் கட்டப்பட்டது. அம்பானியின் ஆன்டிலியா வீடு ரூபாய் 15,000 கோடி மதிப்புள்ளது என்றால் இந்த லட்சுமி விலாஸ் அரண்மனையின் மதிப்பு ரூபாய் 24,000 கோடி என்பது ஆகும்.