ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்கள் தன்னுடைய ராசியை குறிப்பிட்ட இடைவேளையில் மாற்றிக் கொள்ளும் என கூறப்படுகிறது. இடம்பெயர்ந்து சென்று மற்ற கிரகங்களுடன் இணைப்பை உண்டு பண்ணும். இப்படி நடக்கும் பயிற்சியின் பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கும் இருக்கும். அதன்படி நேற்றைய தினம் இரவு 11.15 மணிக்கு புதன் மற்றும் சனி இருவரும் 180 டிகிரியில் சந்தித்தன. இந்த இணைப்பால் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் கிடைக்கும். இவ்வளவு நாள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் கை சேரும். புதிய வழிகளில் வருமானங்கள் வந்து சேரும். வீட்டிலிருந்த கஷ்டங்கள் அனைத்தும் மறைந்துவிடும். நீங்கள் தொழில் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கொடுக்க வாய்ப்பு உள்ளது.. தொழிலிருந்த சிக்கல்கள் சரியாகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றி கொடுக்கும். சிறு காரியங்கள் செய்தால் கூட பல மடங்கு லாபம் கிடைக்கும். பல நாட்களாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொழிலதிபர்கள் அனைத்து வகையிலும் லாபமிட்டுவதற்கான நல்ல வாய்ப்பு. பணவரவு அதிகமாக இருக்கும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டிலும் திருப்தி கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான சூழல் தற்போது உருவாகியுள்ளது. இனிவரும் காலங்களில் வருமானம் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகள் வழங்கப்படும். வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். வேறு வேலைகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். தொழில் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். அதிக பண வரவு இருந்தால் புதிய வாகனம் கூட வாங்கலாம். அதனைப் போலவே பரம்பரை சொத்துக்களும் கையில் வந்து சேர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
