தமிழகத்தில் புதைவட கேபிள்களாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட சட்டசபையில் அறிவிக்கப்பட்ட 256 அறிவிப்புகளை செயல்படுத்த சாத்தியமில்லை என்பதால் அதனை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறுகையில், 2021 ஆம் ஆண்டு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை வெளியான 8,634 அறிவிப்புகளில் 4,516 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3,455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த திட்டங்களை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லாததால் 256 அறிவிப்புகளை கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
