உடல் நிலையில் பின்னடைவு?… திடீரென ICU- க்கு மாற்றப்பட்ட ரோபோ சங்கர்… காலையிலேயே வந்த ஷாக் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 18, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் இந்திரஜா ரோபோ சங்கர். இவருடைய எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவரைத் தொடர்ந்து இவருடைய குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றன. இவருடைய தந்தை ரோபோ சங்கர் பிரபலமான காமெடி நடிகர். பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார்.

இதனிடையே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக நோயிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பின் போது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் ICUவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.