Connect with us
Actor Kali Venkat

CINEMA

‘ ஒரு காலத்துல, ரோட்டுல தள்ளுவண்டியில் காய்கறி வித்தவன் நான்’ – தனது பிளாஷ்பேக் குறித்து, வெளிப்படையாக பேசிய நடிகர் காளி வெங்கட்

சினிமாவில் வெற்றி பெற்ற பிறகு, நடிகர்களின் ஆடம்பரமான வாழ்க்கை, அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் உற்சாக வரவேற்பு, கோடிக்கணக்கில் சம்பளம், பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதை போன்றவை நம்மை வியப்படையவே செய்கிறது. ஆனால், நடிகராக மாறுவதற்கு முன்பு, சாதாரண மனிதர்களாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பலருக்கும் தெரியாது. அப்படி தன் கடந்த கால வாழ்க்கை குறித்த சில விஷயங்களை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் நடிகர் காளி வெங்கட். Actor Kali Venkatஅந்த நேர்காணலில் நடிகர் காளி வெங்கட் கூறியதாவது.. சினிமாவில் எனக்கு எந்த பின்புலமும் இல்லை. நான் யாரோட வாரிசும் இல்லை. சினிமாவில் எனக்கு யாரையுமே தெரியாது. சினிமாவுக்குள் வந்தது, கண்ணை கட்டி சுவத்துல முட்டிக்கிட்டு நின்றது போல்தான் ஆரம்பத்தில் இருந்தது. சினிமாவில் இந்த மாதிரி ஒரு இடத்துக்கு தான் வரவேண்டும் என்பது எல்லாம் எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. சினிமாவுக்குள் வர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை எப்படி அணுகுவது என்றே எனக்கு தெரியாது. Actor Kali Venkatசினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, நானும் ஒரு சாதாரண மனிதனாக நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன். 2006ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க ட்ரை செஞ்சேன். ஆனால், 1998லேயே சினிமாவுக்காக வந்துவிட்டேன். அந்த இடைப்பட்ட எட்டு வருஷ காலத்துல, என்னென்னமோ வேலை எல்லாம் செஞ்சேன். மளிகை கடையில் வேலை செஞ்சேன். வாட்டர்கேன் சப்ளை செஞ்சேன். டீக்கடை வெச்சிருக்கேன். ரோட்டில், தள்ளுவண்டியை தள்ளீட்டு போய் காய்கறி வித்து இருக்கிறேன், என்று தன் கடந்த கால கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகர் காளி வெங்கட்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top