தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எந்த படம் வெற்றி பெறும் என்று நினைத்தது வெற்றி பெறவில்லை வெற்றி பெறாது என்று நினைத்த படங்கள் எல்லாம் வெற்றி பெற தான் செய்கிறது. கடந்த ஆண்டு மகாராஜா, லப்பர் பந்து, கோட், வாழை, அமரன் போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவிலேயே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரும் கவரும் வகையில் இருந்தது.

இந்த ஆண்டு தொடக்கம் நல்லதாக அமைந்தது. விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. ஆனால் அஜித் நடித்த விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்விட்டது.
இந்நிலையில் இறுதியாக விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனாலும் இந்த விடாமுயற்சி படத்தினால் பல படங்கள் பாதிப்படைந்து ரிலீசுக்கு காத்துகொண்டு இருக்கிறது. விக்ரமின் வீரதீரசூரன் படமும் வெயிட்டிங்கில் இருக்கிறது. பல படங்களின் தேதி மாறி இருக்கிறது. அதில் முக்கியமானது ஒன்று தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் ஆகிய திரைப்படங்கள்.

முதலில் தனுஷ் இயக்கிய NEEK திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி ரிலீஸ் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படத்தை டிஸ்ட்ரிபியூட் செய்யும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது இளைஞர்கள் கொண்டாடும் வகையில் இருக்கிறது அதனால் விடாமுயற்சி வரட்டும் அதற்குப் பிறகு இதை நாம் வெளியிட்டு விடலாம் என்று பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அதேபோல் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது விடாமுயற்சி வருவதால் ஒரே வாரத்தில் தியேட்டர் கிடைக்க சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினால் அவர்களும் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸ் என்று தள்ளி வைத்திருக்கிறார்கள். ஒற்றை ஒரு படத்தால் அனைவரும் பாடாய் பட்டு கொண்டிருக்கிறார்கள். தனுஷும் பிரதிப்பும் இதனால் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார்களாம்.
