OAK சுந்தர் என்பவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஒரு வில்லன் குணச்சித்திர நடிகர் ஆவார். இவரது தந்தை OAK தேவர் தமிழ் சினிமாவில் சிவாஜி எம்ஜிஆர் உடன் பல திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர். அதன் மூலம் தமிழ் சினிமாவில் OAK சுந்தருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1992 ஆம் ஆண்டு “நாடோடி பாட்டுக்காரன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு கமலஹாசன் அவர்கள் விருமாண்டி படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்தார். அதன் மூலம் பிரபலமான OAK சுந்தர் தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மகாபாரதம் என்ற தொலைக்காட்சி தொடரில் பீஷ்மரின் கதாபாத்திரத்தை ஏற்று இவர் நடித்ததற்காக வெகுவாக பாராட்டப்பட்டவர்.

இது தவிர நான் அவன் இல்லை, வேல், வேங்கை, பூஜை, கிடாரி, சாமி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர மர்ம தேசம், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, பொம்மலாட்டம், மகாபாரதம், ரோமாபுரி பாண்டியன் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் OAK சுந்தர். எந்த கதாபாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பவர் OAK சுந்தர். இவரை பற்றி ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இவர் ஒரு படத்திற்காக ஒசாமா பின்லேடன் போல் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது இந்திய ராணுவத்தினர் இவர் உண்மையிலேயே ஒசாமா பின்லேடன் தான் என்று கைது செய்து கூட்டி சென்றார்களாம். அதற்கு பிறகு விஷயம் தெரிந்து விடுவித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு எந்த கதாபாத்திரமானாலும் இவருக்கு அப்படியே பொருந்தும். தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் OAK சுந்தர்.
