மாதவன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய பிரபலமான புகழ் பெற்ற நடிகர் ஆவார். தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மாதவன் ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1996 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் மாதவன்.

2000 ஆம் ஆண்டு “அலைபாயுதே” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் மாதவன். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. பேரையும் புகழையும் பெற்று தந்தது. இந்த படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார் மாதவன். அதைத்தொடர்ந்து என்னவளே, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், பிரியமான தோழி, ஜே ஜே போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் மாதவன்.
2000 களின் ஆரம்ப பகுதியில் புகழ்பெற்ற நடிகராக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் மாதவன். ஆனால் 2000 நடுப்பகுதிக்கு பிறகு அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் சரியாக அமையவில்லை. இரண்டாம் நடிகராக நடித்து வந்தார் ஆனாலும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் மாதவன். இந்நிலையில் அஜித்குமார் கார் ரேசிங்கில் கலந்து கொள்வதை முன்னிட்டு அவரது நண்பராக கூடவே இருந்து ஊக்குவித்து வருகிறார் மாதவன்.

சமீபத்தில் கார் ரேசிங் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தார் அஜித்குமார். அதற்குப் பிறகு அஜித் ஷாலினி பற்றி பேசி இருக்கிறார் மாதவன். அவர் கூறியது என்னவென்றால் நானும் ஷாலினியும் “அலைபாயுதே” படத்தில் நடித்தோம். அந்த வருடம் தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் அப்படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போதே ஷாலினி அஜித்தை பற்றி பேசிக்கொண்டே இருப்பார். அப்போது இவர்கள் இருவரும் எப்படி காதலித்தார்களோ அதே போல் தான் 24 வருடங்கள் கழித்தும் இன்றும் அதே காதலோடு இருக்கிறார்கள். அந்த படத்தில் எனக்கு பதிலாக அஜித்குமார் நடித்திருந்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்று நான் பலமுறை ஷாலினியிடமே கூறியிருக்கிறேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் மாதவன்.
