Categories: சினிமா

ராம்கி பண்ண வேலையால சத்யராஜ் உடன் படம் பண்ண முடியல… ஓபனாக பேசிய ஆர். கே. செல்வமணி…

Spread the love

ஆர்கே செல்வமணி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். செங்கம்பட்டியில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆர்கே செல்வமணி. சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த ஆர் கே செல்வமணி பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

ஆரம்பத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தார் ஆர்கே செல்வமணி. 1980 ஆம் ஆண்டு விஜய்காந்தை கதாநாயகனாக வைத்து புலன் விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருந்தது. சில அரசியல் பெரியோர்களின் தூண்டுதலின் பெயரால் பல பெண்களை கடத்திக் கொன்ற ஆட்டோ ஷங்கரின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக புலன் விசாரணை திரைப்படத்தை இயக்கியிருப்பார். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அடுத்ததாக 1991 ஆம் ஆண்டு மறுபடியும் விஜயகாந்த் அவர்களை வைத்து கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ஆனது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு மரியாதை செய்யும் விதமாக இருந்தது. இந்த கதைக்களம் கொள்ளைக்காரன் வீரப்பனை அடிப்படையாகவும் கொண்டிருந்தது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. அந்தப் படத்திற்கு பிறகு தான் விஜயகாந்த் அவர்களை கேப்டன் விஜயகாந்த் என்று மக்கள் அழைக்க தொடங்கினர்.

தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி, பொன்விலங்கு, கண்மணி, ராஜ முத்திரை போன்ற பல படங்களை எழுதி இயக்கியுள்ளார் ஆர் கே செல்வமணி. அடுத்ததாக 1994 ஆம் ஆண்டு அதிரடிப்படை என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கினார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலானவைகளில் ரோஜா நடித்திருப்பார். 2022 ஆம் ஆண்டு ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர் கே செல்வமணி.

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஆர்கே செல்வமணி சத்யராஜ் உடன் படம் எடுக்காமல் போனதற்கான காரணத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் நான் சத்யராஜ் வைத்து போலீஸ் கமிஷனர் என்ற படத்தை இயக்க எல்லாம் பேசி முடிவு செய்து வைத்திருந்தேன். அதில் சத்யராஜ் லீட் ரோல் ஆகவும் இன்னொரு கதாபாத்திரத்தில் ராம்கியை நடிக்க வைப்பதாகவும் பேசி இருந்தேன். ராம்கி நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். சத்யராஜும் படம் பிடித்து இருக்கிறது ஆனால் நான் இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க மாட்டேன் செல்வமணி என்று கூறியிருந்தார். அதற்குள் ராம்கி என்ன செய்து விட்டான்னா தினத்தந்தி பாண்டியனிடம் ராம்கி சத்யராஜ் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஆர்கே செல்வமணி என்று பத்திரிகையில் போட செய்துவிட்டார். அதற்கு பிறகு என்ன ஆச்சு அந்த படமும் எடுக்க முடியாமல் போய்விட்டது என்று ஓபனாக பேசியிருக்கிறார் ஆர் கே செல்வமணி.

admin

Recent Posts

“வரலாற்றில் முதல்முறை… சிபாரிசு, பணம் இல்லாமல் நடந்த 215 அதிகாரிகள் டிரான்ஸ்பர்”…. தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்….!

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…

8 minutes ago

தவெகவில் இணைந்த 6 முன்னாள் அதிமுக MLA-க்கள்…. இத்தனை கோடி சொத்தா?…. வாயடைத்துப்போன அரசியல் களம்….!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…

17 minutes ago

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

28 minutes ago

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

40 minutes ago

தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…

47 minutes ago

CM விஜய் தேர்ந்தெடுத்த ‘புது வழி’…. அமைச்சர்களுக்குப் போட்ட ரகசிய உத்தரவு… டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…

52 minutes ago