தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சென்னை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் குறைந்த செலவில் ‘பீச் வெட்டிங்’ (Beach Wedding) எனும் திருமணங்களை நடத்தும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை வசதி படைத்தவர்கள் மற்றும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே எட்டாக்கனியாக இருந்த கடற்கரை திருமணங்கள், இனி சாமானிய மக்களும் நடத்தும் வகையில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் (TTDC) இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனியார் விடுதிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழலை மாற்றி, அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் இந்த வாய்ப்பு வழங்கப்படுவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் பீச் ரிசார்ட்டில் முதல் கட்டமாக கடற்கரை திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு கட்டணமாக வெறும் ரூ. 10,000 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கான சைவ உணவு ஒரு நபருக்கு ரூ. 700-லிருந்தும், அசைவ உணவு ரூ. 1,100-லிருந்தும் தொடங்குகிறது. தங்குவதற்கு 22 மணி நேரத்திற்கு சுமார் ரூ. 5,000 என்ற கட்டணத்தில் அறைகள் வசதி செய்யப்பட்டுள்ளன.
இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கடற்கரையில் திருமணம் நடத்த விரும்பும் மணமக்கள், மேடை அமைத்தல், அலங்காரங்கள் மற்றும் விளக்குகள் போன்ற இதர ஏற்பாடுகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. தனியார் ரிசார்ட்டுகளை விட மிகக்குறைந்த செலவில், அதே சமயம் பாதுகாப்பான மற்றும் முறையான அனுமதி பெற்ற சூழலில் திருமணம் நடத்துவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக கோவளம், மெரினா, நாகப்பட்டினம் மற்றும் இராமநாதபுரம் போன்ற கடற்கரை பகுதிகளையும் ப்ளூ ஃபிளாக் தரத்திற்கு உயர்த்தி, அங்கு திருமண நிகழ்ச்சிகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவு நடைமுறைகளை அறிய விரும்புவோர், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ttdconline.com மூலமாகத் தெரிந்துகொள்ளலாம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…