2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிரம்மாண்டமான தொடக்க விழாவை ரத்து செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றபோது, பெங்களூருவில் நடத்தப்பட்ட வெற்றி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் இந்த ஆண்டு எவ்வித ஆடம்பரக் கொண்டாட்டங்களும் இன்றி தொடரைத் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டி மார்ச் 28 அன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
மேலும் விபத்து நடந்த அதே நகரத்தில் போட்டி தொடங்குவதால், கொண்டாட்டங்களைத் தவிர்ப்பதே முறை என பிசிசிஐ கருதுகிறது. இருப்பினும், மே 31 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியின் போது பிரம்மாண்டமான நிறைவு விழா நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டை விட உயிரிழந்தவர்களின் நினைவுகளுக்கு மதிப்பளிக்கும் பிசிசிஐ-யின் இந்த முடிவிற்குப் பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது.
