உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவோடு காசியாபாத் ஹிண்டன் தடுப்பணையில் குதித்த பெண்ணை, அங்கிருந்த மீனவர்கள் துணிச்சலாகச் செயல்பட்டு மீட்டெடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக அந்தப் பெண் உயிர் பிழைத்தாலும், இந்தச் சம்பவம் ஹிண்டன் நதியின் கோரமான முகத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்குக் காட்டியுள்ளது.
மேலும் ஒரு காலத்தில் செழிப்பாக ஓடிக்கொண்டிருந்த இந்த நதி, இன்று அடர் கருப்பு நிறத்தில், சகதியாகக் காட்சியளிக்கிறது. அந்த நீரின் அருகில் சென்றாலே வீசும் கடும் துர்நாற்றம், மனிதர்கள் சுவாசிக்கவே தகுதியற்ற ஒரு சூழலை அங்கே உருவாக்கியுள்ளது.
गाजियाबाद- हिंडन बैराज में एक महिला सुसाइड करने के लिए कूद गयी. मछुआरों ने उसे रेस्क्यू करके निकाल लिया.
हिंडन नदी का पानी देखिये! एकदम स्याह काला. इस पानी को तो कोई सूंघते ही बेहोश हो जाये. pic.twitter.com/4q0PjtX99g
— Narendra Pratap (@hindipatrakar) March 26, 2026
“>
இதனால் தொழிற்சாலைக் கழிவுகளும், சுத்திகரிக்கப்படாத நகர்ப்புறக் கழிவுநீரும் கட்டுப்பாடின்றி கலப்பதால், ஹிண்டன் நதி இன்று ஒரு நதி என்பதை விட ‘விஷக் கால்வாய்’ என்றே அழைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தண்ணீரின் நிறம் முற்றிலும் மாறி, உயிர்வளி அற்ற நிலையில் இருப்பதால், அந்த நீரைத் தொடுவது கூட உடல்நலத்திற்குப் பெரும் தீங்கினை விளைவிக்கும்.
இந்நிலையில் இயற்கையின் இந்தச் சீரழிவு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அரசோ அல்லது பொதுமக்களோ உடனடியாகக் கவனம் செலுத்தாவிட்டால், இந்நாட்டின் பல நீர்நிலைகள் இதுபோன்ற ஒரு இறந்த காலத்தையே சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.
